துன்பத்தையும் மகிழ்ச்சியாக்குவோமே!

 விலங்குகள் எப்படி வாழ வேண்டுமென்ற தன்மையை இயற்கை நிர்ணயம் செய்திருக்கிறது. அவை அந்த வாழ்க்கை நிலையிலிருந்து சற்றும் மாறுபட்டு வாழ்வதில்லை. ஆனால், மனிதர்களுக்கோ இப்படித்தான் வாழ வேண்டுமென்ற வரைமுறை எதுவும் வகுக்கப்படவில்லை. அவர்கள் விருப்பம்போல வாழ்ந்து கொள்ளும்படியாக சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தங்களது சுதந்திரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல், அதனை போராட்டமாக உருவாக்கிக் கொள்கிறார்கள். இதனால் பல இழப்புகளை சந்திக்கின்றனர். தங்களுக்கென தரப்பட்டுள்ள சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அன்பு, அறிவு, பணம், இன்பம் என மனிதர்கள் தங்களது தேவைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றை பூர்த்தி செய்து கொள்வதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சி காண்கிறார்கள். ஆக, மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்வதற்காகவே தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இந்த மகிழ்ச்சியை, தேவைகளை அடைந்துதான் பெற வேண்டும் என்பதில்லை. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மனதில் பரிபூரணமாக நினைத்தாலே போதும். அந்த மகிழ்ச்சி தானாகவே கிடைத்துவிடும். எந்தவொரு துன்பமான சூழ்நிலையிலும் மகிழ்ச்சியுடன்தான் இருக்க வேண்டும் என வரையறுத்துக் கொள்ளுங்கள். அதன்படியே வாழ்ந்தால், எல்லா தேவைகளும் உங்களது திறமைக்கு ஏற்ப தாமாகவே கிடைத்துவிடும்.
-சத்குரு ஜக்கிவாசுதேவ்


Posted

in

by

Tags: