Category: ஆன்மிகம்
-
வெற்றிக்கு விடாமல் போராடு
நம்பிக்கை மனதில் இருந்தால் வெற்றி நிச்சயம். நம்பிக்கை இருக்குமிடத்தில் விடாமுயற்சி இருக்கும். ஒரு முயற்சியை மேற்கொண்டால் வெற்றி ஏற்படும் வரை கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் மனதாலும் தீங்கு நினைக்காதீர்கள். யாருக்கும் எதற்கும் பயம் கொள்ளாதீர்கள். இந்த விரதத்தைக் கடைபிடித்தால் வாழ்வில் எப்போதும் துன்பம் இல்லை. ஆண்களுக்கு ஈடான கல்வி பெண்களுக்கும் கிடைக்க வேண்டும். அப்போது சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு மறைந்துவிடும். பகுத்தறியும் சக்தி இல்லாத யாருக்கும் கொள்கை ஒன்றும் இருக்காது. இது தான் கொள்கை…
-
மனதில் நம்பிக்கை மலரட்டும்
பாவத்தைப் போக்கி விட்டால், மனிதனுக்கு தேவர்களைப் போல அமரவாழ்வு உண்டாகும். பழி வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒருவனுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. எந்த விஷயத்தையும் ஆராய்ந்து அனுபவத்தில் பார்த்தால் மட்டுமே அது உண்மையா, பொய்யா என்பதை நம்மால் உணர முடியும். மனிதன் துன்பத்தில் இருந்து விடுபட்டு என்றும் மாறாத பேரின்பத்தை அடைய வேண்டும் என்பது தான் ஆன்மிகத்தின் நோக்கம். கவலை, கோபம், பொறாமை, வெறுப்பு ஆகியவை விஷத்தன்மை கொண்டவை. இவை…
-
துன்பத்தையும் மகிழ்ச்சியாக்குவோமே!
விலங்குகள் எப்படி வாழ வேண்டுமென்ற தன்மையை இயற்கை நிர்ணயம் செய்திருக்கிறது. அவை அந்த வாழ்க்கை நிலையிலிருந்து சற்றும் மாறுபட்டு வாழ்வதில்லை. ஆனால், மனிதர்களுக்கோ இப்படித்தான் வாழ வேண்டுமென்ற வரைமுறை எதுவும் வகுக்கப்படவில்லை. அவர்கள் விருப்பம்போல வாழ்ந்து கொள்ளும்படியாக சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தங்களது சுதந்திரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல், அதனை போராட்டமாக உருவாக்கிக் கொள்கிறார்கள். இதனால் பல இழப்புகளை சந்திக்கின்றனர். தங்களுக்கென தரப்பட்டுள்ள சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும். அன்பு, அறிவு, பணம், இன்பம்…
-
விவேகானந்தரின் பொன்மொழிகள்
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை. கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல். உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை…