சிகரெட், மது போன்று இன்டர்நெட்டும் ஒரு போதை என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள லீஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த பிரபல ஆராய்ச்சியாளர் காத்ரியோனா மோரிசன், மன அழுத்தத்துக்கும் இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பதற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தினார்.
அதாவது 18 முதல் 65 வயது வரை உள்ள ஆயிரம் பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருநாள் இன்டர்நெட்டை உபயோகிக்க முடியாமல் போனால் பதட்டம் ஏற்படுவதாகவும், அதனால் விரக்தி அடைவதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர்.
இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால், ஒருவர் அது என் ஒரு கையை வெட்டியது போல இருக்கும் என்றார்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் பேஸ்புக், ட்விட்டர், மெயில் ஆகியனவற்றின் தொடர்பு கிடைக்காமல் போவதே இந்த மனநிலைக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக பேஸ்புக், டுவிட்டரில் அப்பேட் செய்த பிறகு தான் இரவு படுக்கைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இல்லையென்றால் தூக்கம் வராதாம்.
ஆனால், இந்த கணக்கெடுப்பில் 21% பேர் இன்டர்நெட் இல்லை என்றால் பிரச்சினையில்லை சுதந்திரமாக இருப்பேன் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிகரெட்டுக்கு, மதுவுக்கு எப்படி அடிமையாகி விடுகிறார்களோ அதே போன்று தான் இன்டர்நெட்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.