in

ரெய்னாவுக்கு பதிலாக யுவராஜுக்கு வாய்ப்பு?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்த மாதம் கடைசியிலிருந்து டிசம்பர் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் இரண்டு டி20 போட்டியில் விளையாடுகிறது.

எதிர்வரும் 30ம் திகதி பயிற்சி ஆட்டம் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் நவம்பர் 15ம் திகதி தொடங்குகிறது. டிசம்பர் 17ம் திகதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது.

டி20 போட்டி டிசம்பர் 20 மற்றும் 22ம் திகதி வரை நடைபெறும்.பின்னர் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதற்காக இங்கிலாந்து அணி தனது நாட்டிற்கு செல்லும்.

பின்னர் ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி மீண்டும் இந்தியா வந்து 5 ஒருநாள் போட்டியில் விளையாடும். இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ்சிங் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புற்றுநோயில் இருந்து மீண்ட அவர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் ஆடினார். துலீப் டிராபி போட்டியில் யுவராஜ்சிங் இரட்டை சதம் அடித்தார்.

அவர் 243 பந்துகளில் 208 ஓட்டங்கள் (33 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். இந்த ஆட்டம் மூலம் அவர் டெஸ்ட் அணியில் தன்னை தெரிவு செய்யலாம் என்பதை நிரூபித்துள்ளார்.

ரெய்னாவுக்கு பதிலாக யுவராஜ்சிங் டெஸ்ட் அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. ரெய்னா டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு தான் ஏற்றவர் என்ற கருத்து நிலவுகிறது.

சந்தீப்பட்டில் தலைமையிலான புதிய தெரிவுக்குழு இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியை முதல் முறையாக தெரி0வு செய்கிறது குறிப்பிடத்தக்கது.