, ,

பெண் காவலர்களின் பிரா சைஸை எல்லோருக்கும் இமெயில் செய்த ‘ஏ.சி’!

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர பெண் காவலர்கள் செம தர்மசங்கடத்தில் மூழ்கியுள்ளனர்.

குண்டு துளைக்காத ஜாக்கெட் தைப்பதற்காக அவர்கள் கொடுத்து வைத்திருந்த பிரா அளவுகளை அந்த ஊர் உதவி போலீஸ் கமிஷனர் ஒருவர் தவறுதலாக ஒட்டுமொத்த காவலர்களுக்கும் இமெயிலில் அனுப்பியதால் வந்த தர்மசங்கடம் இது. இந்த வேலையைச் செய்த உதவி கமிஷனரின் பெயர் டிவேயன் லவ்.

de-bullot-5

அந்த ஊர் பெண் காவலர்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட் தைப்பதற்காக அத்தனை பெண் காவலர்களின் உயரம், எடை மற்றும் பிரா அளவு ஆகியவை சேகரித்து ஒரு எக்ஸல் ஷீட்டில் போட்டு வைத்திருந்தனர்.

மொத்தம் நான்கு பக்கங்களைக் கொண்ட ஷீட்டில் ஆண் காவலர்களின் அளவுகள் மற்றும் பெண் காவலர்களின் அளவுகள் இடம் பெற்றிருந்தன.

இதில் கடைசி ஒரு பக்கத்தில் பெண் காவலர்களின் பிரா அளவு உள்ளிட்டவை இருந்தது. ஜாக்கெட் ரெடியானதும், அதுகுறித்த விவரத்தை சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பு டிவேயன் லவ்விடம் கொடுத்திருந்தனர்.

அவர் இதுதொடர்பாக மெயில் அனுப்பியுள்ளார். அப்போது பெண் காவலர்களின் பிரா அளவு இடம் பெற்றிருந்த பக்கத்தை அவர் பார்க்கத் தவறி விட்டார். இதனால் ஒட்டுமொத்தமாக அத்தனை பேரின் விவரம் அடங்கிய எக்ஸல் ஷீட்டை ஒட்டுமொத்த காவலர்களுக்கும் அவர் இமெயிலில் அனுப்பி வைத்து விட்டார்.

இதனால் பெண் காவலர்களின் பிரா அளவு குறித்த விவரம் அத்தனை காவலர்களுக்கும் போய்ச் சேர்ந்து விட்டது. இதனால் பெண் காவலர்களுக்கு தர்மசங்கடமாகி விட்டதாம்.

தான் தெரியாமல்தான் இதைச் செய்து விட்டதாக லவ் விளக்கம் அளித்துள்ளார். இதை டெட்ராய்ட் காவல்துறை அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.