ஐ படத்தில் எனக்கும் எமிக்கும் முத்தக்காட்சி: விக்ரம்

ஷங்கரின் ஐ படத்தில் எனக்கும் எமிக்கும் முத்தகாட்சி வைக்கச்சொல்கின்றேன் என்று நிருபர்களிடம் சியான் விக்ரம் கூறினார்.
சியான் விக்ரம், எமி ஜாக்சன், அனுஷ்கா நடித்துள்ள தாண்டவம் படத்தை விஜய் இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கான ட்ரைலர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட சியான் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, தாண்டவம் படத்தில் எமிக்கும் உங்களுக்கும் முத்தக்காட்சி உண்டா என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த சியான், தாண்டவம் படத்தில் இல்லை. ஐ படத்தில் முத்தக்காட்சியை வைக்கச்சொல்கிறேன் என்றார்.

ஐ படத்திற்கு எமியை நீங்கள் சிபாரிசு செய்தீர்களா என்ற கேள்விக்கு, எமி பிரிட்டனைச் சேர்ந்தவர். ஐ படத்திற்கு அவர் தேவைப்பட்டதன் காரணமாக அவரை ஷங்கர் ஒப்பந்தம் செய்தார். நான் சிபாரிசு செய்யவில்லை என்றார்.

ஏற்கனவே காசி படத்தில் கண்பார்வையற்றவராக நடித்த நீங்கள் தாண்டவத்திலும் நடித்துள்ளீர்கள். இரண்டும் வேறுபடுமா என்ற கேள்விக்கு, கண்டிப்பாக வேறுபடும் என்ற விக்ரம் இன்னும் 5 படங்களில் நடித்தால் கூட 5 விதமாக கண்பார்வையற்றவராக என்னால் நடிக்க முடியும் என்றார்.

தாண்டவம் படத்தில் இருவேறு மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கும் விக்ரம் தன்னுடைய நடிப்பில் அசத்தியுள்ளார் என இயக்குனர் விஜய் தெரிவித்தார்.

Leave a Reply