in

2013ல் திரைக்கு வரும் விக்ரம் நடிக்கும் டேவிட்

சியான் விக்ரம் நடிக்கும் டேவிட், அடுத்த வருடம் 2013ல் திரைக்கு வர இருப்பதாக அதன் இயக்குனர் பெஜாய் நம்பியார் கூறியுள்ளார்.
சியான் விக்ரம், ஜீவா இணைந்து நடித்து வரும் டேவிட் விறுவிறுவென உருவாகி வருகின்றது.

தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம், 2013ம் ஆண்டு ஜனவரி 11ம் திகதி திரைக்கு வர உள்ளதாக படத்தின் இயக்குனர் பெஜாய் நம்பியார் கூறியுள்ளார்.

படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விக்ரமுடன் விவேக் ஓபராய், தபு, இஷா ஷர்வானி ஆகியோர் இந்திப் பதிப்பில் நடிக்கின்றனர்.

டேவிட், நகைச்சுவை கலந்த தாதாக்கள் பற்றிய கதை என்று கூறப்படுகிறது.