, ,

பஸ்ஸிலிருந்து கழன்று ஓடிய சக்கரங்கள்: உயிர் தப்பிய பயணிகள்

வவுனியா நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த அரைச் சொகுசு பஸ்ஸொன்றில் பின் சக்கரங்கள் நான்கும் ஒரே நேரத்தில் கழந்று விழுந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த அரைச் சொகுசு பஸ் ஒன்றின் பின்சக்கரங்கள் நான்கும் ஒரே நேரத்தில் கழன்று விழுந்துள்ளன.

புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 20ம் கட்டைப் பகுதியில் இன்று காலை 9.30 அளவில்இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது அதிகமான பயணிகள் குறித்த பஸ்ஸில் பயணித்துள்ளனர்.

இதன்போது, இரு பயணிகள் காயமடைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

vavuniya_bus_001 vavuniya_bus_002 vavuniya_bus_003 vavuniya_bus_004 vavuniya_bus_005 vavuniya_bus_006