,

சத்யராஜை கிண்டலடித்த சிவகார்த்திகேயன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சத்யராஜை கலாய்த்துள்ளாராம் நடிகர் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இந்த வாரம் வெளியாகவுள்ளது.

முதன்முதலாக இந்தப் படத்துக்காக பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார் சிவா.

இப்படம் குறித்து சிவா கூறுகையில், அழகான கிராமத்துல நடக்குற காமெடிக்கதை இது. நான் போஸ் பாண்டி, வருத்தப்படாத வாலிபர் சங்கத்தோட தலைவர். செயலாளர் கோடியா சூரி அண்ணன் நடிச்சிருக்கார்.

ஊர்ல எந்த விசேஷம் நடந்தாலும் நாங்க தான் முதல்ல நிப்போம். பேனர், கொடின்னு ஏரியா முழுக்க எங்க ராஜ்யம்தான்.

sathyaraj sivakarthikeyan 01அந்த ராஜ்யம் பிடிக்காம முஷ்டியை முறுக்கிட்டு நிக்குறார் சிவனாண்டி கதாபாத்திரத்தில நடிக்குற சத்யராஜ்.

அதுக்கப்புறம் எங்க ரெண்டு டீமுக்கும் நடக்குற ஜாலி மோதல்கள்தான் படத்தோட கதை.

சத்யராஜ் சாரைப் பார்த்து முதல்ல கொஞ்சம் பயந்தேன். அவரே ரொம்ப சகஜமா பேசினார்.

ஒரு சீன்ல அவரைக் கலாய்க்கலாம்னு ‘என்னம்மா கண்ணு சௌக்கியமா’ன்னு அவர் ஸ்டைல்ல சொன்னதும் ரொம்பவே ரசிச்சார்.

தெனாவட்டா, கெத்தா திரியுற என் கதாபாத்திரமும், எனக்கு எதிரா இருக்குற சத்யராஜ் சார் கேரக்டரும் ரொம்ப பெருசா பேசப்படும்.

மேலும் இந்தப் படம் யாரையும் வருத்தப்பட வைக்காது. கேப் விடாம சிரிக்கவைக்கும் என்கிறார் சிவகார்த்திகேயன்.