,

பாடாத சிம்பு நிறுத்திடு… சவுந்தர்யா ரஜினிகாந்த்

நடிகர் சிம்புவிடம் தயவு செய்து பாட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார் கோச்சடையான் பட இயக்குநரான சவுந்தர்யா ரஜினிகாந்த்.

ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த், தனது தந்தையை வைத்து 3டி படமான கோச்சடையானை இயக்கியுள்ளார். இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் மோஷன் கேப்சர் என்ற புதிய தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளார் சவுந்தர்யா.

 

இதன்மூலம், அப்படத்தில் பல புதுமைகளைச் செய்துள்ளார் சவுந்தர்யா. இதனால் அப்படத்திற்கு மக்களிடையே பலத்த வரவேற்பு உள்ளது.

soundarya-rajinikanth-2

 சிம்புவின் கருத்து…

ஆனால், கோச்சடையான் படத்தைப் பார்த்த நடிகர் சிம்பு, ‘படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் சரியாக இல்லை’ என டிவிட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அந்த 5 கேள்விகள்…

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடியில் கலந்து கொண்டார் சவுந்தர்யா ரஜினிகாந்த். அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, ‘ஐந்து பேரிடம் நீங்கள் கேட்க விரும்புகிற கேள்வியை கேட்கலாம்’ எனக் கூறினார்.

 பாடாத சிம்பு…

அதில் ஒன்றாக ‘நடிகர் சிம்புவிடம் என்ன கேள்வி கேட்கப்போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சவுந்தர்யா. ‘பாடாத சிம்பு, நிறுத்திடு’ என்றார்.

பதிலடி…

கோச்சடையான் படத்தை சிம்பு விமர்சித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தற்போது இவ்வாறு சவுந்தர்யா பதிலளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.