in , ,

இந்திய அணியின் பயிற்சியாளராக எதிர்காலத்தில் வர விருப்பமுள்ளது – ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்றழைக்கப்பட்ட முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், டிராவிட் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த டிராவிட் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அவரிடம் வருங்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆக விருப்பம் உள்ளதா என்று கேட்கப்பட்டதற்கு, விருப்பமுள்ளது ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்று பதிலளித்தார்.

மேலும் அவர் கூறுகையில், எனது 16 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் சில சமயம் நிதானத்தை இழந்து கோப்பட்டிருக்கிறேன். வீரர்களின் ஓய்வு அறைக்குள் நுழைந்ததும் சில முறை மட்டைகளை தூக்கி எறிந்திருக்கிறேன்.

அடிக்கடி கோபப்படமாட்டேன். ஆனால் மோசமான ஷாட்டுகள் அடிக்கும் போதோ அல்லது முக்கியமான கட்டத்தில் ஆட்டமிழக்கும் போதோ ஏமாற்றத்தின் தாக்கமாக எனக்குரிய சில உபகரணங்களை சேதப்படுத்தி இருக்கிறேன் என்றார்.

2003ம் ஆண்டு அடிலெய்டில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்டில் இரட்டை சதம் அடித்தது தனது சிறந்த இன்னிங்சிஸ் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணிக்கு அணித்தலைவராகவும், ஆலோசகராகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *