,

புலிக்கு வந்த தலைவலி- இதை எப்படி சமாளிக்கும்?

puli-03

இளைய தளபதி விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் புலி, இப்படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் சமீபத்தில் வந்த ராஜா காலத்து கதையான பாகுபலி மாபெரும் வெற்றி பெற்றது, 2 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இதேபோல் ராஜா காலத்து கதையம்சம் கொண்டது தான் புலி படமும். இப்படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ 118 கோடி என கூறப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கையில் பாகுபலி போல் வசூல் சாதனை படைத்தால் தான் போட்ட பணத்தை விரைவில் எடுக்க முடியுமாம்.

மேலும் புலி படத்துடன் விஷால் நடிப்பில் பாயும் புலி வேற வருவதால், வசூல் பிரியும் வாய்ப்புள்ளது. இதையெல்லாம் புலி படக்குழுவினர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.