,

சொந்தக்குரலில் பாடல்… கலக்கும் பவர் ஸ்டார்

மோசடி வழக்கு… புழல் ஜெயில், திகார் ஜெயில் என்று சுற்றியடித்த பவர்ஸ்டார் சீனிவாசன், ஜாமீனில் வெளிவந்து படப்பிடிப்பில் மீண்டும் பிஸியாகிவிட்டார்.

பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஆர்யா சூர்யா படப்பிடிப்பில் பங்கேற்ற சீனிவாசனை ரசிகர்கள் அன்பினால் திக்குமுக்காடச் செய்து விட்டார்களாம். நடிப்பதோடு, பாட்டுப்பாடி,(!) நடனமாடி(!!) அசத்தியிருக்கிறாராம் பவர்ஸ்டார் இதை அவரே தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்.

powerstar-srinivasan

லத்திகா’ என்ற படத்தை சொந்த செலவில் எடுத்து 200 நாள் போஸ்டர் ஒட்டியவர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். என்னுடைய ஒரே போட்டி ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிதான் என்று ஸ்டேட்மென்ட் விடுத்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்தவர்.

சந்தானம் தயாரித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் காமெடி நடிகராக நடித்தார். ‘சும்மா நச்சுன்னு இருக்கு’, ஆர்யா, சூர்யா, சங்கரின் ‘ஐ’ போன்ற பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போது மோசடி புகார் காரணமாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். திகார் சிறையில் 50 நாட்களுக்கு மேல் இருந்த சீனிவாசன், தற்போது ஜாமீனில் வெளியே வந்து படங்களில் நடித்து வருகிறார்.

பாண்டிச்சேரியில் நடந்த படப்பின்போது ரசிகர்கள் பவர் மீது காட்டிய அன்பு நெகிழ வைத்து விட்டதாம். ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ படத்தை காட்டிலும் ஆர்யா, சூர்யா படத்தில் காமெடி அதிகமாக இருக்கும். இந்த படத்தின் கதை கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் இரண்டு இளைஞர்களின் எளிமையான கதை என்கிறார் பவர்ஸ்டார்.

இந்தப்படத்தில் ஒரு பாடலை என் சொந்த குரலில் பாடியுள்ளேன். அந்தப் பாடலை ரசித்து பாடியுள்ளேன். படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களுக்கும் நான் நடனம் ஆடியுள்ளேன்.

இப்படத்தில் வரும் ‘சூப்பர் ஸ்டார் யாரு பவர பாரு’ என்ற பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.மேலும், டி.ஆர். ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ள குத்துப்பாட்டு பார்ப்பதற்கு ரசனையாக இருக்கும்.