,

ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் போட்டோஷுட் இன்று தொடங்கியது.

வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் கபாலி படத்தை அட்ட கத்தி, மெட்ராஸ் திரைப்படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்குகிறார். இந்தி, வங்காளம், மராட்டியம், மலையாளம், தெலுங்கு, தமிழ் (ஆல் இன் ஆல் அழகுராஜா, டோனி) ஆகிய மொழிகளில் நடித்த ராதிகா ஆப்தே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், கலையரசன், தன்ஷிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசை – சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு – முரளி ஜி.

Rajinikanth-starrer-film-Kapali‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த், ‘கபாலீஸ்வரன்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை.

சென்னை மயிலாப்பூரில் பிறந்து மலேசியாவில் வளர்ந்த மனிதநேயம் மிகுந்த தாதா வேடத்தில் ரஜினிகாந்த் வருகிறார்.

கபாலி படத்தின் போட்டோஷுட் இன்று ஏவிஎம் ஸ்டூடியோவில் தொடங்கியது. இதற்காக படத்தின் கதாநாயகி ராதிகா ஆப்தே சென்னை வந்துள்ளார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படுகிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் (செப்டம்பர்) 17-ந் தேதி மலேசியாவில் தொடங்குகிறது. அங்கு ஒரு மாதம் வரை படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது. அதன்பிறகு மயிலாப்பூரிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.