in

கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயார்: ஓவியா

தொடர்ந்து மாணவி வேடத்தில் நடிப்பது போரடிக்கவில்லை என்றும், கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார் ஓவியா.
நடிகர் விமலுக்கு ஜோடியாக களவாணி படத்தில் அறிமுகமான ஓவியா, பள்ளி மாணவி வேடம் ஏற்றிருந்தார்.

இதையடுத்து சில்லுனு ஒரு சந்திப்பு என்ற படத்தில் மீண்டும் விமல் ஜோடியாகவும், பள்ளி மாணவியாகவும் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், மீண்டும் மாணவியாக நடிக்க வந்துவிட்டேன். கொலிவுட்டில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ஹிட்டானால் தொடர்ந்து அதே வேடங்கள் வருவது வழக்கம்.

களவாணியில் மாணவி வேடம் ஹிட்டானதையடுத்து அடுத்தடுத்த படங்களில் அதேபோன்று நிறைய வேடங்கள் வருகிறது. ஆனால் அது எனக்கு போர் அடிக்கவில்லை.

ஆனால் இந்த வேடத்தோடு நின்றுவிட மாட்டேன். கவர்ச்சியாக நடித்த கலகலப்பு படமும் எனக்கு பேர் பெற்றுத்தந்தது. கவர்ச்சி வேடங்களிலும் தொடர்ந்து நடிப்பேன்.

அதேபோன்று இரண்டு கதாநாயகிகள் படத்தில் நடிக்க மாட்டேன் என்றும் அடம் பிடிக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.