பில்லா 2-வில் காமெடியே இல்லை!

 

 

விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கும் பில்லா2 படத்தில் காமெடியே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்கள் பலரும் தங்களுக்கென்று ஒரு காமெடி நடிகரை பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருப்பார்கள். அந்த வரிசையில் முன்னணி இடத்தில் இருக்கும் அஜித் காமெடியையோ, காமெடியர்களையோ நினைத்து பெரிதாக அலட்டிக் கொள்கிற ரகம் இல்லை.

அதனால்தானோ என்னவோ, பில்லா 2 படத்தை எந்த காமெடி காட்சிகளும் இல்லாமல் உருவாக்கியிருக்கிறார்களாம். ஆம்! விரைவில் வெளிவரப்போகும் பில்லா-2வில் காமெடியே இல்லை. படத்தின் கதை முழுக்க முழுக்க மாஃபியாவை பற்றியது. இதில் எதற்கு தேவையில்லாமல் காமெடியை நுழைக்க வேண்டும் என்பதால் இந்த முடிவினை எடுத்தாராம் சக்ரிடோலட்டி.

 

Leave a Reply