,

செக்ஸ் மோகத்தால் நடுத்தெருவிற்கு வந்த வாலிபன்

அமெரிக்காவில் பாரில் சந்தித்த பெண்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்த வாலிபனின் வீடு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மான்ஹேட்டன் பகுதியை சேர்ந்த மைக்கெல் குர்ரேரி (23)என்ற வாலிபன் மதுபான பார் ஒன்றில் இரு பெண்களை சந்தித்துள்ளார்.

அப்போது அவர்கள் மிகவும் அழகாய் இருப்பதாய் கூறி தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.அவர்களும் மறுக்காமல் மைக்கெலோடு வந்துள்ளனர்.

இதன்பின் மைக்கெலுடன் உல்லாசமாய் இருந்த இப்பெண்கள், அவர் மதி மயக்கத்தில் இருந்தபோது குளிர்பானம் ஒன்றை அவருக்கு குடிக்க கொடுத்துள்ளனர்.

தங்களின் திருட்டை அரங்கேற்ற தொடங்கிய அவ்விரு திருடிகளும் சிறிது நேரத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

women-drugged-playboy-Michael-Curreri-1

சுமார் 12 நேரம் களித்து முழித்த மைக்கெல் தன் வீடு கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தே போயினார்.

இவரது 10 ஆயிரம் அமெரிக்க டொலர் மதிப்பிலான ரோலெக்ஸ் கைகடிகாரம், மேக் ரக மடிக்கணனி, ஐபோன், அவரது சகோதரரின் ஐபோன், 2 ஆயிரம் டொலர் மதிப்பிலான கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), 800 டொலர் மதிப்பிலான சன் கிளாசஸ் மற்றும் 10 ஆயிரத்து 600 டொலர் மதிப்பிலான பணம் ஆகிய பொருட்கள் அனைத்தும் களவாடப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிசில் புகார் அளித்த அவர், பெண்களின் அங்க அடையாளங்கள் குறித்து பொலிசாரிடம் கூறியுள்ளார்.

மேலும் பாலியல் உறவிற்கு ஆசைப்பட்டு பெண்களால் கொள்ளையடிக்கப்பட்ட முதல் நபர் இவராகவே இருக்கும் என்று சட்ட அமலாக்க துறை தகவல் தெரிவிக்கின்றது.