,

மாயா பேயா வந்து மிரட்டப் போகும் நயன்தாரா

மாயா படத்தில் வித்தியாசமான பேயாக வந்து ரசிகர்களை மிரட்ட உள்ளாராம் நயன்தாரா.

நயன்தாரா இதுவரை பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இத்தனை நாட்களாக அவர் தனது அழகால் தான் ரசிகர்களை அசர வைத்தார். ஆனால் தற்போது முதல் முறையாக ரசிகர்களை மிரட்ட உள்ளார். ஆமாம் நயன்தாரா பேய் படத்தில் நடித்துள்ளதை தான் கூறுகிறோம்.

நைட் ஷோ என்று பெயரிடப்பட்ட பேய் படத்தின் பெயரை பின்னர் மாயா என்று மாற்றினர். பெயரை மாற்ற நயன்தாராவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

படத்தில் நயன்தாரா வித்தியாசமான பேயாக வந்து ரசிகர்களை மிரட்டுவாராம்.

maya-8

அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள மாயா படத்தில் நெடுஞ்சாலை புகழ் ஆரி நடித்துள்ளார்.

நயன்தாரா முதல்முறையாக ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார். மாயா படத்தில் அவர் இளம் தாயாக நடித்துள்ளார்.

பேய் படங்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் கோலிவுட் ரசிகர்கள். இந்நிலையில் வெளியாக உள்ள மாயா நிச்சயம் ஹிட்டாகும் என்று கூறலாம்.