, ,

நியூசிலாந்து 508 ஒட்டங்கள் குவிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 508 ஓட்டங்கள் குவித்துள்ளது.
மேக்குல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இதன் முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 240 ஓட்டங்கள் எடுத்தது.

வில்லியம்சன் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். அவர் 105 ஓட்டங்களுடனும், டெய்லர் 34 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இதன் தொடக்கமாக நேற்று 2வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வில்லியம்சஸ் 113 ஓட்டங்களும், டெய்லர் 55 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

பின்களம் இறங்கிய ஜிம்மி நீஸ்ஹாம் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 107 ஓட்டங்கள் எடுத்தார்.இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 508 ஓட்டங்கள் குவித்த போது டிக்ளேர் செய்தது.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ்சை மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடி வருகிறது.

Jimmy Neesham