in

இந்தியத் தொடரில் கெவின் பீட்டர்சன் இடம்பிடித்தார்

இந்தியாவிற்கெதிரான டெஸ்ட் தொடர் போட்டியில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளனர்.

இந்த டெஸ்ட் தொடரில், கெவின் பீட்டர்சன் சேர்க்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்து அணியில் விளையாடமலிருந்த அவரின் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

கெவின் பீட்டர்சன் இந்த வாரம் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ஆன்டி பிளவர், அணித்தலைவர் அலியஸ்டர் குக் மற்றும் நிர்வாகிகளை சந்தித்த பின்பு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சக வீரர்கள் குறித்து தென் ஆப்ரிக்க அணியினருக்கு டுவிட்டர் மூலம், செய்தி அனுப்பியதால், பீட்டர்சன் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இவர், தன்னை அணியில் இணைத்து கொள்வதற்கு எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. சமீபத்தில் இலங்கையில் நடந்த டி20 உலகக் கிண்ணத் தொடரிலும், இவர் இல்லாமல் இங்கிலாந்து அணி களமிற்ங்கியது. ஆனால் படுதோல்வியடைந்து, வெளியேறியது.

அதன் பின்பு நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில், அவர் தற்பொழுது இந்தியாவிற்கெதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட வந்துள்ளது இங்கிலாந்து அணிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.