ஆபாச படங்களில் நடித்ததை நினைத்து வெட்கப்படவில்லை

பாலிவுட்டில் நுழைந்திருக்கும் சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.
ஆபாச பட நடிகையாக இருந்தவர் கனடாவில் வாழும் இந்தியரான சன்னி லியோன்.
ஏராளமான XXX கிரேட் புளூ பிலிம்களில் நடித்தவர்.ஜிஸ்ம்
2 என்ற இந்தி படம் மூலம் பாலிவுட்டுக்கு வந்துள்ளார். பெரும்
எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த படத்தைப் பார்த்தவர்கள் சன்னி லியோன் ஒரு உணர்ச்சியே இல்லாத மரக்கட்டை என்று தெரிவித்துள்ளனர்.

மக்கள் என் மீது காட்டும் அன்பைப் பார்த்து ஆச்சியப்படுகிறேன். அடுத்த 2 ஆண்டுகள் இங்கு தான் படத்தில் நடிக்கவிருக்கிறேன். என்னை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய பூஜா பட்டிற்கு நன்றி. என்னை பலரும் ஆபாச பட நடிகை என்று சொல்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

இது எனக்கு புதிய உலகம். இங்கு நான் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதை வைத்து தான் மக்கள் என்னைப் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும். நான் எனது கடந்த காலத்தை நினைத்து வெட்கப்படவில்லை என்றார். அவர் அடுத்ததாக தி டர்ட்டி பிக்சரை தயாரித்த ஏக்தா கபூரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply