,

சாமியார்களை நாடும் மக்கள் – செக்ஸ் சர்ச்சையில் சிக்கும் பிரபல சாமியார்கள்…

இந்தியாவில் ஆசிரமங்களுக்கும், சாமியார்களுக்கும் பஞ்சமில்லை. நாடுமுழுவதும் ஏதாவது ஒரு ஊரில் அருள்வாக்கு கூறும் சாமியார்கள் பக்தர்களால் போற்றப்படுகின்றனர்.

சிலரது வாக்கு பலிப்பதால் அவர்களின் ஆசிரமத்திற்கு வருமானம் கூடுகிறது. சிலர் நோய் தீர்க்க சிகிச்சை செய்வதால் அவர்களும் ஆன்மீக ஞானிகளாக பக்தர்களால் போற்றப்படுகின்றனர். யோகா கற்றுக் கொடுக்கும் மாஸ்டர்கள் கூட நாளடைவில் மிகப்பெரிய ஆஸ்ரமங்கள் அமைத்து கல்லா கட்டத் தொடங்கிவிடுகின்றனர்.

இவர்களில் சிலர் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்கின்றனர். தவறு செய்தவர் சாமியார் என்பதால் அது மக்களிடம் கொதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே ஏதாவது ஒரு சாமியாரைப் பற்றி சர்ச்சைக்குரிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் செக்ஸ் சர்ச்சையில் சிக்கி ஊடகங்களில் அடிபடுபவர் அஸ்ராம் பாபு.

சாமியார்களை நாடும் மக்கள்

புராண காலத்தில் துறவிகள் என்பவர்கள் அரச குலகுருவாகவும், பல வித்தைகளை கற்றுக்கொடுப்பவர்களாகவும் இருந்துள்ளனர். ஆனால், இன்றைய சாமியார்கள் என்பவர்கள், ஒன்று சித்து வேலைகள் தெரிந்த மந்திரவாதிகளாகவோ அல்லது மக்களை மயக்கும் அளவு பிரசங்கம் செய்பவர்களாகவோ இருக்கிறார்கள்.

nithyanantha-4

அஸ்ரம் பாபு

குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த சாமியார் அஸ்ரம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமம் மற்றும் அறக்கட்டளை இருக்கின்றன. இவர்மீது நிலமோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்தன.

asaram-bapu 1

கடந்த டிசம்பரில் மருத்துவமாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போது சர்ச்சைக்குரிய கருத்தினை கூறி ஊடகங்களில் அடிபட்டார். பலரது கண்டனத்திற்கு ஆளானார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ‘அஸ்ரம் பாபு என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்’ என அவருடைய ஆசிரமத்தில் தங்கியிருந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவர் டெல்லி போலீசில் புகார் செய்யவே இப்போது கம்பி எண்ணி வருகிறார்.

பிரேமானந்தா

premananda-1

திருச்சி பாத்திமாநகரில் ஆஸிரமம் நடத்தி வந்தவர் சாமியார் பிரேமானந்தா. அவர் ஆசிரமத்தில் நடந்த சீடர் கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தா, கடலூர் சிறையில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார்.திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே பிரேமனந்தா எந்த ரகசியத்தையும் வெளியிடாமல் மரணமடைந்து விட்டார்.

நித்யானந்தா

திருவண்ணாமலை, பெங்களூரு என ஆசிரமம் அமைத்து கோடிக்கணக்கான பக்தர்களை வளைத்த நித்யானந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரஞ்சிதா உடன் உறவில் ஈடுபட்டதாக வீடியோ காட்சி வெளியானது. இது நாடுமுழுவதும் பக்தர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. ஏராளமானோர் ஆசிரமத்தை அடித்து நொறுக்கினார். அவரும் சில காலம் சிறைச் சாலைக்குள் சென்று வந்தார்.

nithyanandha-4

நித்யானந்தா சாமியாரின் லீலைகள் வெளிச்சத்திற்கு வந்தாலும்கூட, அவருக்கு இளைய ஆதீனம் பதவி கொடுத்து தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தினார் மதுரை ஆதினம். இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுக்கவே பதவி கொடுத்த ஆதினம் சத்தமில்லாமல் பறித்துக் கொண்டார்.

கல்கி சாமியார்

kalki-1

கல்கி சாமியார் ஆசிரமத்தில் போதைக்கு அடிமையாகி சீரழிந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினர் பற்றி சில மாதங்களுக்கு முன்னால் தொலைக்காட்சியிலும் ஒரு நிகழ்ச்சி வாயிலாக அனைவருக்கும் தெரியவந்தது. இங்கே இருப்பவர்கள் அனைவருமே, போதையில் மிதப்பது மாதிரியே உலவிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதனை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

சென்னை அறவழி சாமியார்

அதேபோல சென்னையில் பிரலபலமான சாமியார் மற்றும் ஜோதிடரான அறவழி சாமியார் என்பவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, அவரது தாயின் துணையுடன் பலருக்கு விருந்தாக்கியதாக பெரும் சர்ச்சை எழுந்தது. சாமியாரும் கைது செய்யப்ப்டடு தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

samiyargal-6

செக்ஸ் சர்ச்சையில் சாமியார்கள் சிக்கினாலும், பீடி சாமியார், குட்டி சாமியார், அரிவாள் சாமியார், சாராய சாமியார் இன்னும் இப்படி எத்தனையோ சாமியார்கள் நாடு முழுவதும் தங்களது ஆசிரமங்களை அவர்களது வசதிக்கு தகுந்தார்ப்போல் அமைத்து, மக்களுக்கு ஆசி வழங்கிகொண்டுதான் இருக்கிறார்கள். சில மாதங்களில் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக அடிபடும் இந்த சாமியார்கள் பின்னர் சத்தமில்லாமல் அமுங்கிவிடுகின்றனர். மக்களும் அதை மறந்துவிட்டு சாமியார்களை நோக்கி செல்லத் தொடங்கிவிடுகின்றனர் என்பதுதான் வேதனை.