,

நான் சூப்பர் ஸ்டாரா? சிவகார்த்திகேயன்

என்னை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள் என்று கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
கோவை ஆர்.எஸ்.புரம் அர்ச்சனா திரையரங்கில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற சினிமாவின் பாடல் சி.டி. மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

பாடல் சி.டி.யை சிவகார்த்திகேயன் வெளியிட பாபா திரையரங்கு உரிமையாளர்கள் பாலசுப்பிரமணியம், ரவீந்திரன், காஸ்மா திரைப்பட வினியோகஸ்தர் சிவா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

ரசிகர்கள் மத்தியில் பேசிய சிவகார்த்திகேயன் சென்னையில் மழை பெய்தும்போது கூட வியர்க்கும், ஆனால் கோவையில் எப்போதுமே ஜில்லென்று இருக்கிறது.

இந்த மக்களின் அன்பும், பாசமும் வித்தியாசமாக உள்ளது. இந்த படத்தின் சி.டி. மற்றும் டிரைலர் கோவை, சேலம், திருச்சி, ஆகிய இடங்களில் வெளியிடப்பட இருந்தது. அதன்படி கோவையில் முதலில் வெளியிடப்பட்டுள்ளது.

Sivakarthikeyan varuthapadatha valiparsangam

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ஹாலிவுட் படம்போல் இருக்காது. குடும்பத்துடன் தைரியமாக பார்த்து ரசிக்கலாம். செப்டம்பர் 6ம் திகதி இந்த படம் வெளியாகிறது. படம் 100 நாட்கள் கண்டிப்பாக ஓடும். 100வது நாளில் நாம் மீண்டும் சந்திப்போம் என்று கூறியுள்ளார்.

சிவ கார்த்திகேயன் பேசியபோது அரங்கில் இருந்தவர்கள் இளைய சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன் என்று கோஷமிட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், என்னை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்.

உலகில் ஒரே சூரியன், ஒரே சந்திரன்தான். அதுபோல் ஒரே சூப்பர் ஸ்டார்தான். எனக்கு கை தட்டி ஆரவாரம் செய்தது உற்சாகமாக உள்ளது. நல்ல படம் தருவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.