in

தமிழ் தவிர வேறு எந்த மொழியிலும் நடிப்பதாக இல்லை! – விஜய்யின் நச் பேட்டி

தீபாவளிக்கு வெடிக்க இருக்கிறது விஜய்யின் துப்பாக்கி.  கள்ளத்துப்பாக்கியுடன் நடத்திய போராட்டம் ஒரு முடிவுக்கு வர சந்தோஷத்தில் இருக்கிறார் விஜய். ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணி வைக்கப்போகும் இந்த தீபாவளி விருந்துக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதற்கு முன் விஜய்யுடன் சின்ன டிரைய்லர் இது…  தினமலர் இணைய தளத்திற்காக விஜய் அளித்த சிறப்பு பேட்டி…

* ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி எப்படி அமைஞ்சுது?

குஷி படத்துல முருகதாஸ் அசிஸ்டெண்ட் டைரக்டர். அப்போதிருந்தே எனக்கு அவர் நல்ல அறிமுகம். அப்பவே எனக்கு அவர் கதை சொல்லியிருக்கார். அப்புறம் அவர் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் வளர்ந்தோம். இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாமுன்னு அடிக்கடி யோசிப்போம். நான் ஒரு படம் முடிச்சிட்டு வர்றப்போ அவர் இன்னொரு படத்துல பிசியா  இருப்பார். அவர் ஒரு படம் முடிச்சிட்டு வர்றப்போ நான் ஒரு படத்துல கமிட் ஆகியிருப்பேன். இப்படியே பல வருஷம் போயிடுச்சு. மூன்று வருஷத்துக்கு ஒருமுறை அப்பாவுக்கு ஒரு படம் நடிச்சித் தருவேன். அப்படி இந்த முறை வந்தப்போ ஏ.ஆர்.முருகாசை பிக்ஸ் பண்ணுங்க நடிக்கிறேன்னு சொன்னேன். அப்பா அதை செய்தார், நான் நடிச்சேன். இடையில் அப்பாவுக்கு தயாரிப்பாளர் சங்க தேர்தல், பொறுப்புன்னு வந்த பிறகு இதை கவனிக்க முடியாமல் கலைப்புலி தாணு சார்கிட்ட கொடுத்துட்டாரு.

* துப்பாக்கியில என்ன ஸ்பெஷல்?

எல்லாமே ஸ்பெஷல்தான். இதுவும் ஆக்ஷன் படம்தான். ஆனா என்னோட படங்கள்ல பறந்து பறந்து அடிப்பேனே அதுமாதிரியெல்லாம் இதுல இருக்காது. சில நேரங்கள்ல பறந்து பறந்து அடிக்கிறதெல்லாம் எனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியும். சரி ரசிகர்கள் ரசிக்கிறாங்களேன்னு நானும் அதை செஞ்சேன். ஆனால் துப்பாக்கியில அப்படி இல்லை. ஒரு ஆள் நாலுபேரோட சண்டைபோட்டா நிஜத்துல எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். உண்மைய சொன்னா இந்தப் படத்துலதான் நான் நிஜமா சண்டை போட்டிருக்கேன். அப்புறம் இன்றைக்கு தேவையான ஒரு நல்ல மெசேஜ் படத்துல இருக்கு. ராணுவ வீரனா ஒரு சின்ன போர்ஷன் இருக்கு. அந்த கேரக்டர்ல நடிச்சது இந்திய குடிமகனா ஒரு திருப்தி இருக்கு. இதை விஜய் படம், முருகதாஸ் படமுன்னு பிரித்து சொல்ல முடியாது இரண்டும் கலந்த படம்.

* பாடிய அனுபவம்…?

பாடுறது ஒண்ணும் புதுசில்லீங்கண்ணா… ஆனா பாடி ரொம் நாளாச்சு. முருகதாஸ் சார் திடீர்னு ஒரு நாள் கூப்பிட்டு இந்த பாட்ட நீங்கதான் பாடணும்னு சொல்லி அடுத்த நாளே மும்பைக்கு கூட்டிட்டுபோயி பாட வச்சிட்டார். மற்றபடி நான் பெரிய பாடகனெல்லாம் இல்லீங்கண்ணா நல்லா இருக்குதுன்னு சொன்னீங்கண்ணா திரும்பவும் பாடுவேன். இல்லேன்னா ரிஸ்க் எடுக்க மாட்டேன்.

* இந்தி பேசி நடிச்சிருக்கீங்களாமே?

மும்பையில வாழுற தமிழனா நடிச்சிருக்குறதால படத்தின் மும்பை போர்ஷன்ல இந்தி பேசுறேன். எனக்கு இந்தியெல்லாம் தெரியாது. இந்தி தெரிஞ்சவரை பக்கத்துல வச்சிக்கிட்டு பேசி நடிச்சிருக்கேன்.

* ஏ.ஆர்.முருதாஸ் உங்களை இந்தி படத்துல நடிக்க வைக்கப்போறதா சொல்லியிருக்காறே?

அது அவரோட ஆசைங்கண்ணா. அவருக்கு நன்றி. ஆனா நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்கண்ணா… நமக்கு தமிழ்தான். இங்கேயே என் ரசிகர்களுக்கு நான் கொடுக்க வேண்டியது நிறைய இருக்கு. இந்தி மட்டுமில்ல தமிழ் தவிர வேற எந்த மொழியிலேயும் நடிக்கிறதா இல்லீங்கண்ணா.

* நண்பன் மாதிரியா படங்களை தொடர்ந்து எதிர்பார்க்கலாமா?

அது வேறங்கண்ணா. இந்தியில பெரிய ஹிட் படம். நல்ல மெசேஜ் உள்ள படம். ஷங்கர் இயக்கினார். இப்படி நிறைய விஷயங்கள் சேர்ந்து வந்ததால ஒரு மாற்றத்துக்காக அதுல நடிச்சேன். தொடர்ந்த மல்டி ஸ்டார் படத்துல நடிக்கிற ஐடியால்லாம் கிடையாதுங்கண்ணா… நண்பன் மாதிரி நல்ல சந்தர்ப்பம் அமைஞ்சா அதை மிஸ் பண்ணவும் மாட்டேங்கண்ணா…

* ஏ.ஆர்.முருகதாஸை குட்டி மணிரத்னமுன்னு வர்ணிச்சிருக்கீங்களே?

தப்புங்களாண்ணா… மணிசார் எதும் தப்பா எடுத்துக்க மாட்டாரே… அதாவது என்னோட படங்கள்ல அடிதடி அதுஇதுன்னு கலர்புல்லா இருக்குமே தவிர பெரிய மேக்கிங் இருக்காது. முதன் முதலா இந்தப் படத்துலதான் மேக்கிங் பார்த்தேன். ஒவ்வொரு ஷாட்டையும் அப்படியே பார்த்து பார்த்து செதுக்கினாரு முருதாஸ். மணிசார்தான் இப்படிச் செய்வார்னு சொல்வாங்க. அதான் அப்படிச் சொன்னேன். சரிதானுங்கண்ணா…

* காஜல் அகர்பால என்னோட ஸ்வீட் கேர்ள் பிரண்டுன்னு கொழுத்திப்போட்டுட்டீங்களே?-

பிரஸ்காரங்க என்னோட நல்ல பிரண்ட்சுங்க. நீங்க பேசுறதுல எங்களுக்கு லீடிங் பாயிண்டே கிடைக்க மாட்டேங்குதுன்னு ரொம்ப ஃபீல் பண்ணினாங்க. அவுங்க ஆசைய நிறைவேற்ற சும்மாங்காட்டியும் சொன்னதுங்கண்ணா. படத்துல அவுங்க என்னோட ஸ்வீட் கேர்ள் பிரண்டா வர்றாங்க. அதைத்தான் சொன்னேன். மற்றபடி வேறெதுவும் இல்லீங்கண்ணா. இந்தி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டு ஆகுதுன்னு சொல்லுவாங்களே அப்படி எதுவும் நமக்கு இதுவரைக்கும் யாரோடையும் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் எதுவும் ஒர்க்அவுட் ஆலைங்கண்ணா… பையன் வேற இப்போ கிசுகிசுவை விரும்பி படிக்கிறான். இந்த நேரத்துல இதெல்லாம் தேவைங்களாண்ணா…

* தாண்டவம் படம் சரியா போகாதால விஜய் இயக்கத்தில் நடிக்க மறுத்து விட்டதாக சொல்கிறார்களே?

படம் ஒடுறதும், ஓடாததும் ரசிகர்கள் கையில இருக்கு. தாண்டவம் படத்தை நானும் பார்த்தேன். ஒரு இயக்குனரா அந்தப் படத்தை நல்லாத்தான் விஜய் பண்ணியிருக்காரு. அதுமட்டுமில்ல ஒருத்தருக்கு வாக்கு கொடுத்துட்டா அதுலேருந்து மீறி பழக்கமில்லீங்கண்ணா. அதனால அடுத்த படம் அந்த விஜய் இயக்கத்துல இந்த விஜய் நடிக்கிறார் நோ டவுட் என்றார்.