, ,

ஐபேட்டை கொடுத்து 2 கிலோ எடையை எடுத்துட்டீங்களே: இங்கிலாந்து வீரர்கள் புலம்பல்

உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர்களுக்கு இலவசமாக ஐபேட் கொடுக்கப்பட்டுள்ளது.
உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் வருகின்ற 12ம் திகதி நடைபெறவுள்ளது. இதையடுத்து எதிர் அணிகளின் வீரர்களை பற்றி அறிய இங்கிலாந்து அணி வீரர்களுக்கு ஐபேட் வழங்கப்பட்டுள்ளது.

இதில் பிற அணி வீரர்களின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த அணி வீரரின் பெயரை கொடுக்கப்பட்டுள்ள அப்ளிகேஷனில் கிளிக் செய்தால் போதும் அவர் சிறப்பாக ஆடிய ஆட்டத்தின் வீடியோ தொகுப்பு உள்ளிட்ட பல விவரங்களை பார்த்து அறிந்துகொள்ளலாம்.

பிரேசில் நாட்டு தட்பவெப்பம், அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் இந்த அப்ளிகேஷனில் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

2014 England World Cup squad

இங்கிலாந்தை விடவும் பிரேசில் வெப்பம் நிறைந்த பகுதி என்பதால் அதை எதிர்கொள்ள மனதளவில் பல தயார்படுத்தல்களை இந்த அப்ளிகேஷன்கள் அளிக்கின்றன.

இந்தக் காரணத்தால் பிரேசிலின் வெப்ப நிலையை சமாளிக்க அமெரிக்காவின் மியாமி கடற்கரை நகரில் இங்கிலாந்து வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

வெப்பத்தில் வீரர்களை வைத்து வாட்டி எடுப்பதால் அதிகப்படியான வியர்வை வெளியேறுகிறது. வெப்பத்தால் உடலில் இருந்து ஏதேனும் தாதுக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்காணித்து அதற்கேற்ப எனர்ஜி பானங்களை கொடுத்து வருகிறார்கள்.

மேலும் வெப்ப பயிற்சியின் போது இங்கிலாந்து வீரர்கள் 2 கிலோ அளவுக்கு உடல் எடையை இழந்துள்ளனர்.