in

உடல் எடையை குறைக்க உதவும் கத்தரிக்காய்

கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் தன்மை கத்தரியில் உள்ளது. கத்தரிக்காயில் குறைந்த கலோரியும், அதிகளவு சத்துக்களும் அடங்கி உள்ளது. முக்கியமாக எடையை குறைக்க விரும்பும் நபர்களுக்கு கத்தரிக்காய் மிக நல்லது.

உலகம் முழுவதிலும் வெப்பமண்டல பகுதிகளில் கத்தரிக்காய் விளைகிறது.

கொழுப்பு சத்து குறைந்த கத்தரிக்காய், குறைந்த ஆற்றலை தரக்கூடியது. 100 கிராம் கத்தரிக்காயில் உடலுக்கு 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது, 9 சதவிகிதம் நார்ச்சத்து உள்ளது.

இந்நிலையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதில் கத்தரிக்காய் முக்கிய பங்கு வகிப்பதாக பிரேசில் நாட்டு பல்கலைக்கழகம் ஒன்று கண்டறிந்துள்ளது.

அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் பிளேவனாய்டு உள்ளது.

இது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்பொருளாகும். புற்றுநோய், முதுமை, நரம்புவியாதிகள், உடல் எரிச்சல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத்தன்மை வழங்கும்.

பி-காம்ப்ளக்ஸ் வகை வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட் (விட்டமின் பி5), பைரிடாக்சின் (விட்டமின் பி6), தயமின் (விட்டமின் பி1), நியாசின் (விட்டமின் பி3) ஆகியன அடங்கி உள்ளன.

கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்களின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், உடற்செயலியல் மாற்றங்களுக்கும் இந்த வைட்டமின்கள் அவசியமாகும்.

கத்தரிக்காயில் தாது உப்புக்களும் நிறைய உள்ளன. இவைகள் மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மாங்கனீசு நோய் எதிர்பொருள்களின் துணைக்காரணியாக செயல்படும். பொட்டாசியம் அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உடற்செல்களின் எரிபொருளாகவும் பயன்படுகிறது.