in

இயக்குனர் ஷங்கர் என் ரசிகர்: பவர் ஸ்டார் சீனிவாசன்

இயக்குனர் ஷங்கர் தன்னுடைய ரசிகர் என்றும் தன் படங்களை விரும்பி பார்ப்பார் எனவும் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் கொமெடி ஸ்டார் சந்தானத்துடன் டொக்டர் சீனிவாசன் நடிக்கிறார்.

பிரமாண்ட பட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி, சந்தானம் ஆகியோருடன் ‘ஐ’ படத்தில் நடிக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, இயக்குனர் ஷங்கர் என்னோட பெரிய ரசிகர்.

என் படங்களை அவர் விரும்பி ரசித்துள்ளார். இந்த ‘ஐ’ படத்தில் நானும் சந்தானமும் இணைந்து கொமெடி பண்றோம்.

படப்பிடிப்பில் ஷங்கர் எனக்கு உதவி செய்து,உற்சாகப்படுத்தினார். அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் ஷங்கர் சாரின் ‘ஐ’ படக்குழுவுடன் இணைகிறேன் என்று டொக்டர் சீனிவாசன் கூறியுள்ளார்.