, ,

மகிந்த நாளாந்த செலவுக்கா கோடிகளை செலவிட்டார்: மைத்திரியின் நாளாந்த செலவு?

ஆட்சியிலிருந்து விரட்டப்பட்ட இலங்கையின் முன்னாள் சர்வாதிகாரி மகிந்த ராஜபக்சவின் ஆடம்பர, ராஜபோக வாழ்க்கை அனைவரும் அறிந்ததுதான். மக்களின் வரிப்பணத்தில் குடும்பமே கும்மாளமடித்து குதூகலித்திரு்தது. மகிந்தவின் ஒருநாள் செலவு மாத்திரம் 2.6 கோடிக்கும் சற்று அதிகமானது என்பது ஏற்கனவே வெளியாகியிருந்தது.

யுத்தத்தின் பின்னரான வரவு-செலவு திட்டங்களில், மொத்த நிதியில் அரைவாசிப்பங்கு மகிந்த, பசில், கோத்தா என சகோதரர்கள் மூவரிற்கும் கீழிருந்த அமைச்சுக்களிற்கு ஒதுக்கப்பட்டு, சுருட்டுவதை சுருட்டிக் கொண்டு, எஞ்சியதில், நாடு பூராவும் தமது கட்-அவுட்களை காட்சிப்படுத்தினார்கள்.

SriLankaPRES 2

நாட்டை பகல்கொள்ளையடித்தவர்களின் கதை முடிந்த பின்னர், ஆடம்பர செலவினங்கள் எல்லாம் குறைந்துவிட்டது. மைத்திரியின் பதவியேற்பு செலவு வெறும் 6300 ரூபாய்தான். இ்த நிலையில், அவரது நாளாந்த செலவு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. 2850 ரூபா தொடக்கம்- 8000 ரூபாவரைதான் அவரது நாளாந்த செலவு உள்ளதாம்!