, ,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மிரட்டலுக்கு அடிபணிந்த ஐ.சி.சி

இந்திய கிரிக்கெட் வாரியம், எங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமெனெ சர்வதேச கிரிக்கெட் வாரியத்தை மிரட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.) முடிவு எடுப்பதில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்களுக்கு அதிக அதிகாரம் மற்றும் கூடுதல் வருவாய் பகிர்வு ஆகியவற்றுக்கு வழி வகை செய்யும் திருத்தப்பட்ட புதிய சட்ட வரைவு சில மாதங்களுக்கு முன்பு ஐ.சி.சி. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Sanjay Patelஇதற்காக மேற்கொண்ட முயற்சிகள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், எங்களது திட்டத்திற்கு பல்வேறு ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும், பெரும்பாலான கிரிக்கெட் வாரியங்கள் எங்கள் கூற்றை ஏற்றுக் கொள்ள மறுத்தன.

இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றால், எங்களுக்கு என்று சொந்தமாக இன்னொரு ஐ.சி.சி. அமைப்பை உருவாக்க வேண்டி இருக்கும் என்று நாங்கள் எச்சரித்தோம்.

அதன் பிறகே இங்கிலாந்து, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் எங்கள் திட்டத்தை ஏற்றுக் கொண்டது என்று தெரிவித்துள்ளார்.