in ,

சச்சினுக்கு விருது வழங்க அவுஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அவுஸ்திரேலியாவின் உயரிய விருதினை கொடுக்க அந்நாட்டு எம்.பி. உட்பட பலதரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

டெல்லிக்கு சென்றிருந்த அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்டு, சச்சின் டெண்டுல்கருக்கு அவுஸ்திரேலியாவின் “ஆர்டர் ஆப் அவுஸ்திரேலியா” விருது வழங்கப்படும் என்று நேற்று அறிவித்தார்.

இவ்விருது அவுஸ்திரேலியா குடிமகன்களுக்கு மட்டுமே வழங்கப்படும் உயரிய விருதாகும். முதன்முறையாக இந்தியருக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவின், ராப் ஒகாஸூட் என்ற சுயேட்சை எம்.பி. ஒருவர், பிரதமர் ஜூலியா கிலார்டின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கிரிக்கெட்டை நேசிக்கிறேன். அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சி‌னையும் நேசிக்கிறேன்.

அதற்காக அவருக்கு அவுஸ்திரேலியாவின் கௌரமிக்க விருதினை கொடுப்பது சரியல்ல என்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்தவருக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என்றார்.

இவரைப் போன்று பல்வேறு விளையாட்டுத்துறை அமைப்புகளும், அரசியல் பிரமுகர்களும் பிரதமர் கிலார்டு முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர்.