, ,

இந்திய மண்ணை எடுத்து மைதானம் அமைக்கும் அவுஸ்திரேலியா

இந்திய மண்ணில் சாதிப்பதற்கு அவுஸ்திரேலிய அணி புதுத்திட்டம் தீட்டியுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 4 டெஸ்டிலும் படுதோல்வி அடைந்தது.

சில மாதங்களுக்கு முன்பு ஆஷஸ் கிண்ணத்தை வென்று டெஸ்ட் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்த அவுஸ்திரேலியா அந்த இடத்தை தொடர்ந்து தக்க வைக்க வெளிநாட்டு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது.

Australia Cricket 2

இதனால், ஆசிய மண்ணில் சாதிப்பதற்கு புதிய வழிமுறையை நாடியுள்ளது. இதன்படி இந்தியாவில் இருந்து மண்ணை இறக்குமதி செய்து பிரிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஆசிய மைதானங்களில் இருப்பது போன்று பயிற்சி ஆடுகளங்களை (பிட்ச்) அமைக்க முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் தங்களது பலவீனங்களில் ஒன்றான சுழற்பந்து வீச்சில் முன்னேற்றம் காண முடியும் என்று அவுஸ்திரேலியா அணி நம்பி வருகிறது