, ,

கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் TEASER வெளியீடு

கார்த்தி நடித்துள்ள அலெக்ஸ் பாண்டியன் படத்திற்கான TEASER வெளியாகியுள்ளது.சகுனி படத்திற்கு பின்பு StudioGreen’s ஞானவேல் ராஜா தயாரிப்பில் கார்த்தி நடிக்கிறார்.

படு பயங்கரமான ஓக்ஷன் படமாக உருவாகி வரும் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் கார்த்தியுடன் முதன் முறையாக அனுஷ்கா இணைந்துள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்புகள் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வருகின்றது.

கொலிவுட்டில் மூவேந்தர், தலைநகரம், மருதமலை, படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை இயக்கிய சுராஜ், முதன்முறையாக கார்த்தியை இயக்குகின்றார்.

சிறுத்தை, சகுனி படங்களில் கார்த்தியுடன் லூட்டி அடித்த சந்தானம் அலெக்ஸ் பாண்டியனிலும் இணைகிறார்.