, ,

டெஸ்ட் அணித்தலைவர் …ஏமாற்றத்தில் டிவில்லியர்ஸ்

தென் ஆப்ரிக்க அணியின் டெஸ்ட் அணித்தலைவர் பொறுப்பு தனக்கு கிடைக்காதது பெரிய ஏமாற்றமாக உள்ளது என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்க அணியின் டெஸ்ட் அணித்தலைவரான கிரேம் ஸ்மித் ஓய்வு அறிவித்ததையடுத்து, ஹஷிம் ஆம்லா அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆம்லா, டிவிலியர்ஸ் இடையே டெஸ்ட் கேப்டன் பொறுப்பிற்கு கடும் போட்டி நிலவி வந்தது.

AB de Villiers 3

இதுகுறித்து டிவில்லியர்ஸ் கூறுகையில், நான் டெஸ்ட் அணித்தலைவர் இல்லை என்பது எனக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.

எல்லோருக்கும் கனவுகளும், நம்பிக்கைகளும் இருக்கும் அது நிறைவேறும் என்ற ஆசையும் இருக்கும், நான் சூழ்நிலையை புரிந்து கொள்கிறேன்.

ஆனால் இந்த ஏமாற்றம் எனக்கும் ஆம்லாவுக்கும் இடையே வராமல் நான் பார்த்துக் கொள்வேன்.

இது எனது ஆட்டத்தையும், அணியில் எனது பொறுப்பையும் பாதித்தால் அது முட்டாள் தனமானது, ஆம்லாவுக்கு எனது வாழ்த்துக்கள், எனது முழு ஒத்துழைப்பு அவருக்கு எப்போதும் உண்டு என்று தெரிவித்துள்ளார்.