>90 வினாடிகளில் கொல்லப்பட்டார் பின்‌லாடன்

>

லண்டன்: பின்லாடன் 90 வினாடிகளுக்குள் சுட்டுக்கொல்லப்பட்டார்என்று கூறப்பட்டுள்ள புத்தகத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மேமாதம் பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் பதுங்கியிருந்த பின்லாடன் அமெரிக்காவின் சீல் என்றழைக்கப்படும் கப்பல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான். முன்னதாக அவன் தஙகியிருந்த வீட்டை முற்றுகையிட்ட அமெரிக்க‌ படையினர் 45 நிமிட துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் பின்லாட‌னை சுட்டுக்கொன்ற கப்பற்ப‌ைடைகுழுவில் பணியாற்றிய முன்னாள் கமாண்டர் சக்பிபார்ரெர் என்பவர் எழுதியுள்ள புத்தகத்தில் பின்லாடன் வீட்டிற்குள் நுழைந்த 90 வினாடிகளில் அவன் சுட்டுக்கொல்லப்பட்டான். மொத்தமாக நான்கு சுற்றுக்கள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்திய ஹெலிகாப்டர்களில் ஒன்று பின்லாடன் வீட்டு காம்பவுண்டு சுவரில் மோதியது.

இந்த தாக்குதலில் பின்லாடனின் மனைவி அமால் துப்பாக்கி குண்டு தாக்கி படுகாயமடைந்தார். தொடர்ந்து நடந்த தாக்குதல்களில் அவர் கொல்லப்பட்டார். மேலும் அல்குவைதாவின் துணை தலைவராக இருந்த ஜவாஹிரி மூலம் கூரியர் அனுப்பி வந்ததை வைத்து பின்லாடனின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக தனது புத்தகத்தி்ல் கூறியுள்ளார்.

Leave a Reply