,

சென்னை மாலில் பரபரப்பாக அலைந்த அஜித்

ajith 30
எந்த விதமான கலை நிகழ்ச்சிகளிலும் அஜித்தை பார்க்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவரின் பெயர் ஒலிக்காத கலை நிகழ்ச்சிகளே இல்லை.

இந்த அளவிற்கு பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் அஜித், பொது இடத்தில் படப்பிடிப்பு வைத்தால் எப்படியிருக்கும்? ஆமாம், நேற்று சென்னையில் பிரபல மாலில் தல-56 படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

இதில் ஸ்ருதி, லட்சுமி மேனனுடன் யாரையோ கோபமாக தேடுவது போல் காட்சிகள் எடுத்துள்ளார்கள். மேலும், ஒரு சில சண்டைக்காட்சிகளும் அந்த இடத்திலேயே எடுக்க, விஷயம் அறிந்த அடுத்த நிமிடம் ரசிகர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது.