, ,

உலகை ஆட்டிப் படைக்கும் கால்பந்து ஜீரம்

பிரேசிலில் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் தொடங்க உள்ளதால் ரசிகர்கள், வியாபாரிகள், விளம்பரதாரர்கள் பயங்கர குஷியாக உள்ளனர்.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் சார்பில் 20வது உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் பிரேசிலில் நடைபெறவுள்ளது.

வருகிற 12ம் திகதி தொடங்கும் இத்தொடரில் 32 அணிகள் பங்கேற்கின்றன.

இத்தொடருக்காக பல்வேறு வழிகளில் சுமார் ரூ. 23 லட்சம் கோடி வரை புரளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பிரேசில் அரசு மட்டும் ரூ. 88,983 கோடி செலவிடுகிறது. புதிய மைதானங்களை கட்டியது, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செலவிட்டது.

இப்போட்டிகளை உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய பிபா அமைப்புக்கு மட்டும் ரூ, 23,728 கோடி வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

fifa worldcup 02

மேலும் கால்பந்து தொடர்பான விளையாட்டு பொருட்கள் தயாரிப்புக்களுக்கு, 3.5 முதல் 4 சதவீதம் வரை ஆர்டர் அதிகரித்துள்ளதாம்.

இதன் படி, மொத்தம் ரூ. 21,41,524 கோடி வரைக்கும் இந்த தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள் சம்பாதிக்கவுள்ளனர்.

அத்துடன் உலக கிண்ண கால்பந்து தொடர் வந்து விட்டால், ‘பெட்டிங்’ தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு திருவிழா தான்.

பெட்டிங்கில் ஈடுபடும் இங்கிலாந்தை சேர்ந்த வில்லியம் ஹில் என்பவர் கூறுகையில், இத்தொடரில் மொத்தம் ரூ. 9,937 கோடி வரை சூதாட்டம் நடக்கும் என தெரிவித்துள்ளார்.