,

அனுஷ்காவிற்காக எதையும் செய்வேன் -பீட்டர் ஹெய்ன்!

இந்திய சினிமாவின் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன்.

இவர் சிவாஜி, 7ம் அறிவு, கோ போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலியின் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் பாகுபலி படத்திலும் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார்.

இதில் அனுஷ்காவுக்கும் பல சண்டைக்காட்சிகள் இருப்பதாக ராஜமவுலி முன்பே கூறியிருந்தார்.

இதுவரை ஹீரோவுக்காக மட்டும் டூப் போட்ட பீட்டர், முதல்முறையாக ஹீரோயின் அனுஷ்காவுக்காக டூப் போட்டதாகவும், மேலும் அனுஷ்காவுக்காக பல ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளில் தான் நடித்துள்ளதாகவும், இந்த சண்டைக்காட்சிகளில் அனுஷ்கா உண்மையிலேயே நடித்திருந்தால் அவரது வாழ்வில் பல விபரீதங்கள் நடந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அனுஷ்கா போன்ற திறமையான நடிகைக்கு எவ்வளவு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.