,

சிவகார்த்திகேயன் தயவினால் தப்பிப்பிழைத்த வேலையில்லா பட்டதாரி. பரிதாபத்தில் தனுஷ்.

தனுஷ் தற்போது நடித்து ரிலீஸுக்கு தயாராகவுள்ள ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை வாங்குவதற்கு விநியோகிஸ்தர்கள் தயங்கியதாக தெரிகிறது. தனுஷ் நடித்து வெளியான 3, நையாண்டி, மரியான் ஆகிய மூன்று படங்களும் வசூல் ரீதியில் திருப்தியான கலெக்ஷனை கொடுக்காததால், அந்த படத்தை வாங்குவதற்கு விநியோகிஸ்தர்கள் யோசித்ததாக தெரிகிறது. மேலும் படத்தை ரொம்பவும் அடிமாட்டு விலைக்குத்தான் விநியோகிஸ்தர்கள் கேட்டனர்.

siva

இதனால் அதிர்ச்சி அடைந்த தனுஷ், பின்னர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து சொந்தமாக தயாரித்துக்கொண்டிருக்கும் டாணா படத்தையும் சேர்ந்து விலை பேசினார். இம்முறை அவருடைய திட்டம் பலித்தது. சிவகார்த்திகேயனுக்கு நல்ல மார்கெட் இருப்பதால் இரண்டையும் சேர்த்து வாங்கிக்கொள்ள விநியோகிஸ்தர்கள் முன்வந்தனர். இன்னும் பாதிகூட முடியாத நிலையில் இருக்கும் டாணாவை வைத்து ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை விற்பனை செய்துவிட்டார்.

அதுபோலவே சன் டிவி நிறுவனமும், இரண்டு படங்களையும் சேர்த்து சாட்டிலைட் உரிமையை பெற்றுக்கொண்டது. சிவகார்த்திகேயன் புண்ணியத்தில் தனது படத்தையும் சேர்த்து வியாபாரம் செய்த தனுஷின் நிலைமையை கோலிவுட் பரிதாபமாக பார்க்கின்றது. தனுஷின் 3 படத்தில் இருந்துதான் சிவகார்த்திகேயன் கோலிவுட்டில் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.