இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கேல் ஜாக்சன் ஆவி!

வாஷிங்டன்: மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ஆவி அவரது வீட்டைச் சுற்றி வருவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு அவரது மருத்துவர் அதிக அளவில் மயக்க மருந்து, வலிநிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் கொடுத்ததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் அவர் உயிரை விட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள பெவர்லி ஹில்ஸ் வீட்டில் அவரது ஆவி உலவுவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

உலாவுவது மட்டுமல்ல இரவு நேரத்தில் பாடவும் செய்கிறதாம். இதனால் அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர். மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருக்கையில் அடிக்கடி ஜன்னல்கள் வழியாக யார் போகிறார்கள், வருகிறார்கள் என்பதைப் பார்ப்பாராம். தற்போது அவர் இசையமைக்கும், பாட்டுப் பாடும் சத்தம் கேட்கிறதாம்.

மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருக்கையில் தனது குழந்தைகள் பிரின்ஸ், பாரிஸ் மற்றும் பிளாங்கெட்டுடன் பெவர்லி ஹில்ஸ் வீட்டில் தான் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு ஆவிகள் மீது நம்பிக்கை இருந்தது. தற்போது அவரே ஆவியாக வருகிறார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply