நான் மீண்டும் சினிமாவில் நடிப்பதை அஜீத் விரும்பவில்லை! – ஷாம்லி

நான் சினிமாவில் நடிப்பதை அக்கா கணவர் அஜீத் விரும்பவில்லை. ஆனாலும் என் விருப்பத்துக்கு குறுக்கே நிற்காமல் ஒத்துழைப்பு தருகிறார் என ஷாலியின் தங்கை ஷாம்லி கூறியுள்ளார்.

ஷாம்லி குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் கலக்கியவர்.

இப்போது குமரியாகி மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இப்போது நாயகி வேடங்களில் நடிக்கிறார். துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்தில் ஷாமிலி ஒரு தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

actress-shamili

அதே போல் விக்ரம் பிரபுவின் வீர சிவாஜி படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ஷாம்லி 2009-லேயே ஒரு தெலுங்கு படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்தார்.

ஆனால் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். மீண்டும் நடிக்க வந்தது குறித்து ஷாம்லி கூறுகையில், “உண்மையில் அஜித்துக்கு நான் நடிப்பதில் விருப்பமில்லை.

எனினும் நான் நடிக்க வேண்டும் என்ற ஆசையை சொன்னவுடன் அதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

நான் போட்டோ எடுக்க வேண்டும் என கூறியவுடன், அவரே முன்வந்து என்னை புகைப்படங்கள் எடுத்தார்,” என்றார்.

via filmibeat

‘ப்ரூஸ் லீ’ நாயகியாகிறார் நயன்தாரா?

பிரசாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ப்ரூஸ் லீ படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆதிக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ . இப்படம் வரும் செப்டம்பர் 17ம் தேதி ரிலீசாகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, பிரசாந்த் இயக்கத்தில் ‘ப்ரூஸ் லீ’, ‘கெட்ட பயடா இந்த கார்த்தி’ மற்றும் சாம் ஆண்டன் இயக்கவிருக்கும் புதிய படம் ஆகியவற்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

nayantara 2

 

ப்ரூஸ் லீ படத்தை இயக்கும் பிரசாந்த், இயக்குநர் பாண்டிராஜிடன் இணை இயக்குநராக பணியாற்றியவர். இப்படத்திற்கு பாண்டிராஜ் வசனம் எழுத, கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இன்னும் இப்படத்தின் நாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், இப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

நயன்தாராவிற்கு கதை பிடித்து விட்டதாகவும், எனவே விரைவில் அவர் நாயகியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலி படத்திற்கு வந்த பெரிய சிக்கல்

puli flim vijay

இளைய தளபதி திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் புலி. இப்படத்தின் வசூல் குறைந்தது ரூ 200 கோடி வரவேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில் படத்தின் பட்ஜெட்டே ரூ 114 கோடி வரை இருப்பதால், ரூ 200 கோடி வசூல் செய்தால் தான் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால், மற்ற படங்களின் வருகை புலி படத்தின் வசூலை குறைக்குமா என்று பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

அக்டோபர் 1ம் தேதி புலி வர, அடுத்த நாளே விஜய் சேதுபதியின் நானும் ரவுடி தான், ஆர்யா-அனுஷ்காவின் இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்கள் வெளிவரவிருக்கின்றது. இப்படங்களின் வருகை கண்டிப்பாக புலி படத்தின் வசூலில் கொஞ்சமாவது பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

ஜி.வி. பிரகாஷ்லாம் எம்மாத்திரம்: ஒரு பாட்டுக்காக 24 மணிநேரம் லிப் டூ லிப் கொடுத்த இம்ரான், கங்கனா

கட்டி பட்டி இந்தி படத்தில் வரும் லிப் டூ லிப் கிஸ்ஸியான் பாடலுக்காக இம்ரான் கானும், கங்கனா ரனாவத்தும் 24 மணிநேரம் முத்தம் கொடுத்துள்ளனர்.

பாலிவுட் படங்களில் லிப் டூ லிப் காட்சிகள் ஏதோ குச்சிமிட்டாய் சாப்பிடுவது போல் ஆகிவிட்டது. இப்படி ஒரு லிப் டூ லிப் காட்சியால் தான் ரித்திக் ரோஷனின் திருமண வாழ்க்கையில் முதல் இடி விழுந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு லிப் டூ லிப் காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த காட்சியில் நடித்தவர்கள் இம்ரான் கானும், கங்கனா ரனாவத்தும்.

katti-batti1

கட்டி பட்டி என்ற படத்தில் இம்ரான் கானும், கங்கனா ரனாவத்தும் சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் அவர்கள் லிப் டூ லிப் கிஸ்ஸியான் என்ற பாடல் காட்சியில் தான் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுள்ளனர்.

ஒரு லிப் டூ லிப் முத்தக்காட்சியில் நடிக்கவே ஒரு நாள் கால்ஷீட் கொடுத்த நடிகை உள்ள பாலிவுட்டில் லிப் டூ லிப் கிஸ்ஸியான் பாடலுக்காக இம்ரானும், கங்கனாவும் மூன்று நாட்களை ஒதுக்கி முத்தமிட்டுள்ளனர்.

லிப் டூ லிப் பாடலுக்காக இம்ரானும், கங்கனாவும் 24 மணிநேரம் முத்தம் கொடுத்துள்ளனர். மூன்று நாட்கள் தினமும் 8 மணிநேரம் முத்தம் கொடுத்து அந்த பாடலை நச்சுன்னு முடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் வரும் முத்தக்காட்சியில் நடிக்க ஜி.வி. பிரகாஷ் 36 டேக்குகள் வாங்கினார் என்பது பெரிய விஷயமாக பேசப்பட்டது. தற்போது இம்ரானும், கங்கனாவும் 24 மணிநேரம் இச்சு கொடுத்துள்ளதை என்ன சொல்ல?

ரஜினி இடத்திற்கு வந்த விஜய்- ரசிகர்கள் உற்சாகம்

 

rajini_vijay001

இளைய தளபதி விஜய்யின் மார்க்கெட் தற்போது தென்னிந்தியா முழுவதும் வளர்ச்சி அடைந்து விட்டது. இந்நிலையில் இவர் நடிப்பில் புலி திரைப்படம் மிக பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.

இப்படம் முதலில் செப்டம்பர் 17ம் தேதி வெளிவருவதாக கூறப்பட்டு, அக்டோபர் 1ம் தேதி தற்போது ரிலிஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இதே நாளில் தான் எந்திரன் படமும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது, இதனால், எந்திரன் அளவிற்கு புலியும் வசூல் சாதனை படைக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

‘கபாலி’யில் தர்மதுரை கெட்டப்பில் வருகிறார் ரஜினி?

கபாலி படத்தில் ரஜினியின் கெட்அப் எப்படி இருக்கும்? ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வி இது. வலையுலகிலும் திரையுலகிலும் இதே பேச்சாக இருக்கிறது.

ரசிகர்கள் ரஜினியின் தோற்றம் இப்படித்தான் இருக்கக் கூடும் என்று கற்பனை செய்து அதற்கு ஒரு வடிவமும் கொடுத்து உலவவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன் வந்த தர்மதுரை படத்தின் ஆரம்ப மற்றும் இறுதிக் காட்சிகளில் வருவது போலத்தான் இந்தப் படத்தில் ரஜினி தோன்றப் போகிறார் என செய்திகள் கசிந்துள்ளன.

rajini-30

இந்தப் படத்திலும் ரஜினிக்கு ஒப்பனையாளராகப் பணியாற்றப் போவது பானுதான். சிவாஜி, எந்திரனில் ரஜினியை அவரது ஆரம்ப கால தோற்றத்தில் காட்டி ரசிகர்களைப் பரவசப்படுத்தியதில் பானுவுக்கும் ஒரு பங்கு உண்டு என்பது நினைவிருக்கலாம்!

ரஞ்சித் இயக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வரும் செப்டம் 17-ம் தேதி வெளியாகவிருக்கிறது .

உச்சக்கட்ட கோபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி

019

சூப்பர் ஸ்டார் மிகவும் நிதானமாக தான் தன் அடுத்தடுத்த பணிகளை தற்போது செய்து வருகிறார். ஏனெனில் லிங்கா தோல்வி, தொடர் பிரச்சனைகள் என மிகவும் வருத்தத்திற்கு ஆளானார்.

தற்போது கபாலி படத்தின் போட்டோ ஷுட் சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரபல ஸ்டுடியோவில் நடந்தது. இதில் சால்ட்&பெப்பர் லுக்கில் ரஜினி வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் செப்டம்பர் 17ம் தேதி இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் வரும் என அறிவித்த நிலையில் யாரோ ரஜினியின் புது தோற்றத்தை நெட்டில் லீக் செய்ய, ரஜினி மிகவும் கோபமடைந்து விட்டதாக கூறப்படுகின்றது.

புலி முடிவால் பல படங்களுக்கு விடிவுகாலம்

 

puli vijay

இளைய தளபதி திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் புலி.

இப்படம் செப்டம்பர் 17ம் தேதி திரைக்கு வருவதாக இருந்து, தற்போது அக்டோபர் 1ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலிஸ் தேதி மாற்றத்தால் பல படங்கள் செப்டம்பர் 17ம் தேதி களம் இறங்கவுள்ளது.

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, ரஜினிமுருகன், கோ 2, நீண்ட நாள் கிடப்பில் கடந்த 49-ஓ ஆகிய படங்கள் தற்போது இந்த தேதியில் வரவுள்ளது.

கவர்ச்சியான இந்திய நடிகைகள் யார்? வெளிவந்த டாப் 10 லிஸ்ட்

heroines001

இந்திய சினிமாவை பொறுத்த வரை நடிகர், நடிகைகளுக்கு எப்போதும் ஒரு வகை கருத்துக்கணிப்பு நடந்து கொண்டே தான் இருக்கும். சமீபத்தில் இந்திய அளவில் 30வயதிற்கு குறைவான நடிகைகளில் யார் கவர்ச்சியானவர் என ஒரு கருத்துக்கணிப்பு நடந்துள்ளது.

இதில் 1. ஜாக்குலீன் ஃபெர்னாண்டஸ், 2. தீபிகா படுகோனே, 3. ஸ்ருதி ஹாசன் , 4. அனுஷ்கா ஷர்மா, 5. இலியானா, 6. அலியா பட், 7.கங்கணா ரணாவத், 8.யாமி கௌதம் 9.தமன்னா, 10. ஷ்ரதா கபூர் ஆகியோர் முதல் 10 இடத்தில் இடம் பிடித்துள்ளனர்.

இந்த கருத்துக்கணிப்பில் ஸ்ருதி, தமன்னா ஆகிய தென்னிந்திய நடிகைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.